திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்தியஅமைச்சருமான ஏ.கே.அந்தோணி மற்றும் அவரது மனைவிக்கு  கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை அவரது மகன் உறுதி செய்துள்ளார்.

நாடு கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களின் அஜாக்கிரதை காரணமாக தொற்றுகள் பரவுவதும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மட்டுமின்றி, அதிகாரிகள், சமூக ஆர்வல்கள், சுகாதார பணியாளர்கள், அரசியல் கட்சியினர் பல தரப்பினரும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரான ஏ.கே.அந்தோணிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை அவரது மகன் அனில் கே.அந்தோணி உறுதி செய்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,  தனது பெற்றோர்கள் இருவரும் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். மேலும், அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.