லக்னோ :

பீகார் தேர்தலில் ஐதராபாத் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது.

ஒவைசி கட்சி வாக்குகளை பிரித்ததால், பா.ஜக, கூட்டணி ஆட்சியை பிடித்துள்ள நிலையில் உருது கவிஞர் முன்னாவர் ராணா, “பா.ஜ.க.வின் எடுபிடியாக செயல்படும் ஒவைசி, முஸ்லிம்களை பிளவு படுத்தி பா.ஜ.க. அரசியல் லாபம் பெறும் வகையில் செயல்பட்டு வருகிறார்” என குற்றம் சாட்டியுள்ளார்.

“இந்தியாவை பிரித்த முகமது அலி ஜின்னாவை போன்றவர், ஒவைசி” என்று குறிப்பிட்டுள்ள கவிஞர் முன்னாவர் “இந்தியாவில் இன்னொரு ஜின்னா உருவாவதை முஸ்லிம்கள் அனுமதிக்க மாட்டார்கள்” என்றார்.

“மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட தனது 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை காப்பாற்றி கொள்வதற்காக அசாதுதீன் ஒவைசியும், அவரது சகோதாரர் அக்பருதீனும், அப்பாவி முஸ்லிம்களை தவறாக வழி நடத்தி செல்கின்றனர்” என்று தெரிவித்த கவிஞர் முன்னாவர் “ஒவைசி, பா.ஜக.,வின் ஏஜெண்ட்” என்று காட்டமாக கூறினார்.

– பா. பாரதி