புதுடெல்லி:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44, 281 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு 512 இறப்புகள் ஏற்பட்டுள்ளது, இதனால் மொத்தமாக இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88,35,921 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவில் தற்போது 4, 94, 657 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர், அதே நேரத்தில் 80,13, 783 தேர் கொரோனா சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர்.
இதுவரை இந்தியாவில் கொரோனா வைரசிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 92.69 சதவீதமாகவும், இறந்தவர்களின் விகிதம் 1.48 சதவீதமாகவும் உள்ளது.
மகாராஷ்டிராவில் தற்போது 96,437 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதல் இடத்தை பிடித்து வருகிறது, மேலும் தேசிய தலைநகரான டெல்லியில் புதிதாக 7,830 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களும் கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டி உள்ளதாகவும், அதே நேரத்தில் 12,70,171 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.