சென்னை
தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2257 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,46,079 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 11,362 பேர் உயிர் இழந்து 7,15,892 பேர் குணம் அடைந்து தற்போது 18,825 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 585 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதுவரை சென்னையில் 2,05,419 பேர் பாதிக்கப்பட்டு 3,726 பேர் உயிர் இழந்து 1,95,880 பேர் குணம் அடைந்து தற்போது 5,813 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அடுத்ததாக கோவை மாவட்டத்தில் 45,287 பேர் பாதிக்கப்பட்டு 576 பேர் உயிர் இழந்து 43,711 பேர் குணம் அடைந்து தற்போது 1000 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 44,999 பேர் பாதிக்கப்பட்டு 693 பேர் உயிர் இழந்து 43,387 பேர் குணம் அடைந்து தற்போது 919 பேர் சிகிச்சையில் உள்ளனர்.