சென்னை: தமிழ் மொழியை தேசிய மொழியாக்க பாஜக கோரிக்கை வைக்குமா என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: தமிழ்க் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்தவேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பாஜக, அது போலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும் கோரிக்கை வைக்குமா? என்று பதிவிட்டுள்ளார்.