திருவாரூர்
கமலா ஹாரிஸ் தேர்தல் வெற்றிக்காக அவரது சொந்த ஊரில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இதில் தற்போதைய அதிபர் டிரம்ப் மற்றும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் ஆகியோர் மோதுகின்றனர்.
ஜோ பிடன் சார்பில் இந்திய வம்சாவழியினரான கமலா ஹாரிஸ் துணை அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கமலா ஹாரிஸின் முன்னோர்கள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துலசேந்திரபுரம் என்னும் ஊரை சேர்ந்தவர்கள்.
எனவே இங்குள்ள மக்கள் தங்கள் ஊர் பெண்ணான கமலா ஹாரிஸ் வெற்றி பெறப் பிரார்த்தித்து உள்ளனர்.
இங்குள்ள கோவிலில் கமலா ஹாரிஸ் தேர்தல் வெற்றிக்காக சிறப்பு பூஜைகளை அவர்கள் நடத்தி உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel