சென்னை: தாய்ப்பால் மூலம் கொரோனா பரவும் வாய்ப்பு மிகவும் குறைவு என தமிழகத்தில் நடத்த ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. கருப்பையில் அல்லது தாய்ப்பால் மூலம் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சென்னை எழும்பூரில் உள்ள பெண்கள் மருத்துவமனை, குழந்தைகள் மருத்துவமனை மற்றும் கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்டிடியூட் ஆகியவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன. இதுவரை நடத்தப்பட்ட முடிவுகளின்படி, தாய்ப்பாலில் இருந்துகொரோனா பரவ வாய்ப்பில்லை என்றும், தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உலகநாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாய்ப்பால் மூலம் கொரோனா வைரஸ் பரவாது என்பதை உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளது. இருந்தாலும் ஏராளமான சிறுவர் சிறுமிகளும் தொற்று பாதிப்புக்கு பலியாகி உள்ளனர்.
கொரோனாவைக் கண்டு கர்ப்பிணிகள் அதீத பயம் கொள்ளத்தேவையில்லை. தே போல, கொரோனா பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து பிறக்கும் குழந்தைக்கு நோய் பரவும் வாய்ப்பும் மிகவும் குறைவுதான். நோய்த் தொற்று ஏற்பட்ட அம்மாக்களும் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கலாம். இதுவரை, தாய்ப்பாலில் கோவிட்-19 வைரஸ் கண்டறியப்படவில்லை என்று யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளும் தாய்ப்பால் கொடுக்கலாம் தமிழ்நாடு அரசு பொதுசுகாதார முன்னாள் இயக்குனர் டாக்டர் க.குழந்தைசாமி அறிவுறுத்தி இருந்தார். அதேபோன்று தாய்க்கு இல்லாமல் குழந்தைக்கு மட்டுமே தொற்று இருந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம். மேலும், கர்ப்ப காலத்தில் வழக்கமாக நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும். அதனால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் வாய்ப்புகளை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் அடிக்கடி வெளியில் செல்லக்கூடாது. பிரசவ தேதிக்கு ஐந்து நாட்களுக்கு முன் கர்ப்பிணிகள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குழந்தை பிறந்த பிறகு எந்தக் காரணம் கொண்டும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் உடன் எக்மோர் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் நிறுவனம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அரசு மருத்துவமனை ஆகியவை தாய்ப்பால் மூலம் கொரோனா பரவுமா என்பது குறித்து ஆய்வு நடத்தியது.
இதுகுறித்து தெரிவித்த எழும்பூர் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் எஸ் விஜயா, ஆய்வுக்கு கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாயிடமிருந்து கருப்பையில் உள்ள குழந்தைக்கு தொற்று பரவுகிறது, தாய்ப்பால் மூலம் பரவுகிறதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது. இதற்காக பிரசவ நாளில், பெண்ணிடம் சுரக்கும் அம்னோடிக் திரவம், நஞ்சுக்கொடி துணி, குழந்தையின் நாசி, தொப்புள் கொடி இரத்தம் என நான்கு மாதிரிகளை சோதனைக்கு எடுத்துக்கொள்வதாகவும், குழந்தை பிறந்த மூன்றாவது நாளில், குழந்தையின் நாசியில் இருந்து எடுக்கப்படும் மாதிரி மற்றும் தாய்ப்பாலின் மாதிரியையும் சேகரிக்கப்பட்டு மற்றொரு சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனைகள் அனைத்து, கொரோனா நெறிமுறைக் குழு அனுமதியுடன் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும், மூன்று குழந்தைகள் (தாய்மார்களுடன் தொடர்பில்லாதவர்கள்) முதல் நாளில் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தாலும், மூன்றாவது மற்றும் ஐந்தாவது நாளில் நாசியில் எடுக்கப்பட்ட சோதனைகள் எதிர்மறையாக இருந்தன. இதேபோல், ஐந்தாவது நாளில் முறையே இரண்டு நோயாளிகளின் தாய்ப்பால் மற்றும் நஞ்சுக்கொடியை பரிசோதித்தபோது அது எதிர்மறையாக இருந்தது.
தற்போது வரை செய்யப்பட்ட ஆய்வுகளின்படி, கர்ப்பிணி தாயிடம் இருந்தோ, தாய்ப்பாலில் இருந்தோ கொபரோனா பரவுவதறகான சாத்தியம் குறைவாகவே இருப்பது தெரிய வந்துள்ளது. இதுவரை, 548 தாய்மார்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு உள்ளது. அதுபோல, தாய்ப்பாலில் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை நடத்தப்பட்டுள்ள ஆய்வுகளில் தாய்ப்பால் மூலம் கொரோனா பரவுவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு என்பது தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ளார்.
தாய்ப்பால் குழந்தைக்கு ஊட்டச்சத்தை அளித்து, நோயிலிருந்தும் பாதுகாக்கிறது. இதனால், அனைத்து தாய்மார்களும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதைத் தொடர வேண்டும் என்றே நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதே நேரம் தாய்ப்பால் கொடுக்கும் சமயம், பாதிக்கப்பட்ட பெண் இருமும் போதும் தும்பும் போதும், சுவாசக் குழாயிலிருந்து வெளியேறும் நீரிலிருந்து குழந்தைக்கு நோய் பரவும் வாய்ப்பு இருக்கிறது.
குழந்தைக்கு முகக்கவசம் அணிவிக்க முடியாது என்பதால், கூடுதல் எச்சரிக்கையுடன் சுகாதாரத்தை கடைப்பிடிப்பது அவசியம். வைரஸ் பாதிக்காத பெண்களும், தாய்ப்பால் கொடுக்கும் போது நிச்சயம் முகக்கவசம் அணிய வேண்டும். குழந்தையை தொடுவதற்கு முன்னும், பின்பும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கொரோனா பாசிடிவ் பெண்கள் தாய்ப்பால் கொடுக்க Breast pump பயன்படுத்துவதும் சிறந்தது. கர்ப்பிணி பெண்களில் கொரோனா தொற்றால் ஏற்படும் பாதிப்புகளின் ஆய்வுகள் குறைவாகவே உள்ளன.