மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 58 காவலர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகமான கொரோனா தொற்று மகாராஷ்டிராவில் தான் உள்ளது. அம்மாநிலத்தில் காவல்துறையினரும் அதிக அளவில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 58 போலீசாருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,589 ஆக அதிகரித்து உள்ளது.

ஒட்டு மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 284 ஆக உள்ளது. மாநிலத்தில் இதுவரை 24,919 காவலர்கள் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னமும் 1,386 காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.