டெல்லி: அக்டோபரில் ஜிஎஸ்டி வரி வருவாய் 1 லட்சம் கோடியை தாண்டி உள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஜிஎஸ்டி மூலம் கிடைக்க பெற்ற வரிவருவாய் பற்றி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது:

அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,05,155 கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளது. இந்த தொகையில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 19,193 கோடியாகும் என்றும்,  மாநிலங்களின் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 5,411 கோடி என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இறக்குமதி ஜிஎஸ்டி வருவாய் ரூ. 52,540 கோடி, செஸ் வருவாய் ரூ. 8,011 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 95,379 கோடி வசூலானது. ஆனால் இப்போது அதையும் தாண்டி அக்டோபரில் ஜிஎஸ்டி வரி வருவாய் 1 லட்சம் கோடியை தாண்டி உள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டு உள்ளது.  செப்டம்பரில் வசூலானதைவிட 10% அதிகமாக வசூலாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.