சிங்கப்பூர் :
சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான் அரச குடும்ப வாரிசு என்று கூறுவதுண்டு, அது உண்மையும் கூட…
பிரிட்டிஷாரின் காலனியாதிக்கத்திற்கு முன் மலாய் அரசர்களின் கீழ் இருந்த இந்த பகுதி, 1965 விடுதலைக்குப் பின் குடியரசு நாடாக விளங்குகிறது.
இங்கு இருந்த அரச குடும்ப வாரிசுகள் பலரும், தங்கள் உரிமையையும் உடைமையையும் இழந்து சாமானிய மக்களாக ஆக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது.
ஆனாலும், தங்கள் பெயருடன் அரச குடும்பத்தை சேர்ந்தவர் என்பதற்கான “டெங்க்கு” எனும் அடையாளத்தை இன்றும் பலர் பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்களின், குடும்ப சொத்துகள் பலவும், அரசு அருங்காட்சியகமாகவும் நினைவுச் சின்னங்களாகவும் மாற்றப்பட்டபின். வாரிசுகள் பலரும் தங்கள் பிழைப்பிற்காக பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
கால் டாக்ஸி ஓட்டும் “டெங்க்கு” பைசல், கொரோனா வைரஸ் காரணமாக தனது வருமானம் முடங்கியதால், அதை ஈடுகட்ட அவரது மனைவி ரஹாயு மெக்-டொனல்ட்ஸ் விற்பனை நிலையத்தில் வேலை பார்ப்பதாக கூறுகிறார்.
சி-சூட் எனும் திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கும் “டெங்க்கு” இந்த்ரா, கொரோனா வைரஸ் காரணமாக தனது வீட்டில் இருந்து ஜும் மீட்டிங் மூலம் பயிற்சியளிப்பதாக தெரிவிக்கிறார்.
தன் தோளில் அணிந்துகொள்ள செய்து வைத்திருக்கும் அரச சின்னத்தின் மாதிரியை காண்பிக்கும் அரச குடும்ப வாரிசான “டெங்க்கு” ஷவால், அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள அவர்களுக்கு சொந்தமான அவரது மூதாதையர் இல்லத்தில் சுற்றுலா வழிகாட்டியாக வேலைசெய்கிறார்.
அரச குடும்ப வாரிசுகள் பலர் இதுபோல் பல்வேறு இடங்களில் வேலைபார்த்துவரும் தகவலை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது.