சென்னை
பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜகவில் சமீபத்தில் புதிய பதவி நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியது.
இந்த அறிவிப்பில் தமிழகத்தில் யாருக்கும் தேசிய அளவில் பதவிகள் அளிக்கப்படவில்லை.
இது தமிழக பாஜகவினருக்கு கடும் ஏமாற்றம் அளித்தது.

இன்று பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் பாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel