டில்லி
முகநூல் நிறுவனத்தின் இந்தியா, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் பொது கொள்கை இயக்குநர் அன்கி தாஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முகநூலில் இந்தியா, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கு பொதுக் கொள்கை இயக்குநராக அன்கி தாஸ் பதவி வகித்து வந்தார்.
அமெரிக்க ஊடகங்களில் அன்கி தாஸ் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக செய்தி வெளியாகியது.
இதையொட்டி முகநூல் ஊழியர்கள் சிலர் இவர் மீது குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் இன்று அன்கி தாஸ் முகநூல் இயக்குநர் பதவியில் இருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து முகநூல் நிர்வாகம் அன்கி தாஸ் பொதுச்சேவை ஆர்வம் காரணமாகப் பதவி விலகி உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel