துரை

துரையில் உள்ள வைகை நதி விரைவில் லண்டனில் உள்ள தேம்ஸ் நதி போல மாறும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறி உள்ளார்.

வைகை நதி

அதிமுகவின் மதுரை மேற்கு மாநகர் மாவட்டம் இளைஞர் மற்றும் பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடந்தது.  மதுரையில் உள்ள ஜெய்ஹிந்த் நகர் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் இந்நிகழ்வு நடந்தது.  இந்த நிகழ்வுக்குத் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமை தாங்கினார்.

செல்லூர் ராஜு தனது தலைமை உரையில்,” அரியர்ஸ் மாணவர்கள் பாஸ் என்ற துணிச்சல் முடிவை எடுத்த நம் முதல்வர்.  மாணவர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக பத்தாம் வகுப்பில் அனைவரும் பாஸ் என்று அறிவித்தவர் ஆவார்.

தேம்ஸ் நதி

தற்போது அதிமுக  ஆட்சியில் மதுரையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. மதுரையில் வெகு விரைவில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தைச் சத்தமில்லாமல் அதிமுக அரசு செய்து வருகிறது.

விரைவில் லண்டன் தேம்ஸ்  நதியைப் போல் மதுரை வைகை நதி மாற உள்ளது.   எதிர்காலத்தில் மதுரையில் போக்குவரத்து நெரிசல் இருக்காது.  அதிமுகவில் முதல்வராக வேண்டும் என அனைவரும் அப்துல் கலாம் சொன்னது போல்  கனவு காணுங்கள் அனைவரும் அதிமுக ஆட்சியில் முதல்வராக வாய்ப்பு இருக்கிறது. ” என்று பேசினார்.