டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்க வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லியில் சாஸ்திரி பூங்கா, சீலாம்பூர் சுற்றுப்புறங்களில் அமைக்கப்பட்டு உள்ள 2 புதிய மேம்பாலங்களை அவர் பொதுமக்கள் சேவைக்கு திறந்து வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாலங்கள் திறக்கப்பட்டதால் மக்கள் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை எதிர்கொள்ள மாட்டார்கள். ரூ. 250 கோடி மதிப்பீட்டில் இந்த மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பூசி நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அனைவருக்குமான உரிமை இது. நாட்டு மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்று கூறினார்.