மாஸ்கோ: ரஷ்யாவில் இன்று அதிகளவாக ஒரே நாளில் 17,340 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

ரஷ்யாவில் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்த நிலைமை தற்போது மாறி உள்ளது. நாள் ஒன்றுக்கு 15,000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டு சுகாதார அமைப்பு கூறி உள்ளதாவது: 24 மணி நேரத்தில் புதியதாக 17,340 பேருக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 5,478 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்த பாதிப்பு 14,80,646 ஆக உள்ளது. 24 மணி நேரத்தில் 283 பேர் உள்பட இதுவரை 25,525 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 11,19,251 பேர் முழு குணம் பெற்றுள்ளனர். 3,35,870 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel