டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பருவமழை தொடங்கியது முதல் சில மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மையம் மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தை நோக்கி நகர்வதால் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. திரிபுரா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் நாளை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.