இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .
அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ராஜமெளலி, ஐஸ்வர்யா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முழுமையாக கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். சிலர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், அதை வெளியே சொல்லாமலே வீட்டில் தனிமைப்படுத்திக் குணப்படுத்திக் கொண்டுள்ளனர்.


இந்நிலையில் தற்போது குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது கொரோனா வைரஸ் டெஸ்ட் முடிவுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ”பாதுகாப்பு கருதி மூன்றாவது முறையாக நான் கோவிட் பரிசோதனை மேற்கொண்டேன். காரணம் நான் சில பயணங்களை மேற்கொண்டு, சில கூட்டங்களில் பங்கேற்றேன். இம்முறையும் கொரோனா வைரஸ் நெகட்டீவ் என்றே வந்திருக்கிறது. உங்கள் ஆசிர்வாதங்களுக்கு நன்றி” என அவர் பதிவிட்டுள்ளார்.