ஷாரூக் கான் மற்றும் கஜோலின் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ திரைப்படம் வெளியாகி இது 25-வது வருடம்.
படத்தைத் தயாரித்த யாஷ் ராஜ் ஃபிலிம்ஸுக்கு இது துறையில் 50-வது வருடம்
ஆதித்யா சோப்ராவின் முதல் படமான இது இந்தியத் திரையுலகில் வரலாறு படைத்த திரைப்படங்களில் ஒன்று. வெறும் 4 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 102.50 கோடி ரூபாயை வசூலித்தது. இன்றைய மதிப்பில் இது கிட்டத்தட்ட 524 கோடி ரூபாய்க்குச் சமமானது.
25 years!!! Filled with gratitude towards you for loving Raj & Simran, with all your heart. This always feels special. #DDLJ25 @yrf pic.twitter.com/HHZyPR29f9
— Shah Rukh Khan (@iamsrk) October 20, 2020
இப்படம் வெளியாகி 25 வருடம் ஆகிய நிலையில் ஷாருக் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் .
இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் ‘டிடிஎல்ஜே’. மும்பையில் உள்ள மராத்தா மந்திர் திரையரங்கில் ஏறக்குறைய 20 ஆண்டுகாலம் இப்படம் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.