அமிர்தசரஸ்
பஞ்சாப் மாநிலத்தில் வைக்கோலை எரிக்க அரசு தான் காரணம் என விவசாயிகள் கூறி உள்ளனர்.
டில்லியை சுற்றி உள்ள பஞ்சாப், அரியானா, உபி உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது அறுவடை முடிந்து வைக்கோல் சேர்ந்துள்ளன.
அவற்றை விவசாயிகள் எரிப்பதால் டில்லி நகரம் மிகவும் மாசு அடைந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இதனால் விவசாயிகள் மீது நகர வாசிகள் குறை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப் மாநில அமிர்தசரஸ் பகுதி விவசாயிகள் அதற்குப் பதில் அளித்துள்ளனர்.
விவசாயிகள் இது குறித்து,
“விவசாய கழிவான வைக்கோலை எடுத்துச் செல்ல எங்களுக்கு வசதி இல்லை.
ஆகவே அரசுதான் அதற்கு உதவ வேண்டும்.
சிறு விவசாயிகளால் டிராக்டர் வாங்க முடிவதில்லை என்பதால் நாங்கள் வைக்கோலை எரிக்கிறோம்
எனவே வைக்கோல் எரிக்கப்படுவதற்கு அரசுதான் முக்கிய காரணம் ஆகும்.”
எனத் தெரிவித்துள்ளனர்.