லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தில் துணைமாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வருபவர்  ஐஏஎஸ் அதிகாரியான சவுமியா பாண்டே.  கர்பாக இருந்த அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.  இதனையடுத்து விடுப்பு எடுக்காமல், தன்னுடைய 3 வாரகால குழந்தையை கையில் ஏந்தியவாறு பணிக்கு திரும்பியுள்ளார்.

சவுமியா பாண்டே, கையில் குழந்தையுடன் கோப்புகளை கையெழுத்திடும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

14 நாட்களில் பணிக்கு திரும்பியது ஏன் என்பது குறித்து கூறிய சவுமியா, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக  ஜூலை மாதம் காஜியாபாத் மாவட்டத்தில் மோடிநகர் பகுதியில் கோவிட்  நோடல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதாக கூறியவர்,   “நான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, எனவே நான் எனது சேவையை கவனிக்க வேண்டும். கோவிட் -19 காரணமாக, அனைவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. கடவுள் தனது குழந்தையைப் பெற்றெடுப்பதற்கும் பராமரிப்பதற்கும் பெண்களுக்கு பலம் அளித்துள்ளார் .

கிராமப்புற இந்தியாவில், பிரசவத்திற்கு அருகிலுள்ள நாட்களில் பெண்கள் கர்ப்பகாலத்தில் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் வேலைகளைச் செய்கிறார்கள் மற்றும் பெற்றெடுத்த பிறகு அவர்கள் குழந்தையை கவனித்துக்கொள்கிறார்கள், மேலும் அவர்களின் வேலையையும் வீட்டையும் நிர்வகிக்கிறார்கள். இதேபோல், எனக்கும் கடவுள்  ஆசீர்வாதம்  உள்ளது என நினைக்கிறேன். எனது மூன்று வார பெண் குழந்தையுடன் எனது நிர்வாகப் பணிகளை என்னால் செய்ய முடிகிறது.

 மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் நிர்வாக ஊழியர்கள் எனது கர்ப்ப காலம் முழுவதும் எனக்கு ஆதரவளித்து வந்தனர். தறபோது,  எனது முடிவுக்கு, எனது குடும்பம்   நிறைய ஆதரவளித்துள்ளது.

எனது பிரசவத்துக்காக  செப்டம்பரில் நான் 22 நாட்கள்  விடுமுறை எடுத்துக்கொண்டேன். பிரசவத்திற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நான் தெஹ்ஸில் பணியில் சேர்ந்தேன் என்று கூறியவர்,  “ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணும் COVID-19 தொற்றுநோய்களின் போது பணிபுரியும் போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

ஐஎஸ்அதிகாரி சவுமியா பாண்டேவின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

[youtube-feed feed=1]