டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 71,19,300 ஆக உயர்ந்து 1,09,184 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 67,789 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 71.19,300 ஆகி உள்ளது.  நேற்று 813 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,09,184 ஆகி உள்ளது.  நேற்று 71,564 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 61,46,427 ஆகி உள்ளது.  தற்போது 8,62,611 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 10,792 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 15,18,226 ஆகி உள்ளது  நேற்று 305 பேர் உயிர் இழந்து மொத்தம் 40,345 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,461 பேர் குணமடைந்து மொத்தம் 12,66,240  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 5,210 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,55,727 ஆகி உள்ளது  இதில் நேற்று 30 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,224 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,509 பேர் குணமடைந்து மொத்தம் 7,03,208 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 9,523 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,10,309 ஆகி உள்ளது  இதில் நேற்று 75 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 9,966 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,107 பேர் குணமடைந்து மொத்தம் 5,80,054 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 5,015 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,56,385 ஆகி உள்ளது  இதில் நேற்று 65 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,252 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,005 பேர் குணமடைந்து மொத்தம் 6,02,038 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 3,267 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,36,979 ஆகி உள்ளது  இதில் நேற்று 41 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,394 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,467 பேர் குணமடைந்து மொத்தம் 3,90,566 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.