சென்னை: டிடிவி தினகரனின் ஆதரவாளரும், அமமுக பொருளாளருமான முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேலுக்கு கொரோனாத்தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதுவரை,  1,79,424  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தறபோதைய நிலையில் 13,446 (7.49%) பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக சட்டமன்ற தேர்தல், கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக அமமுக மாவட்ட நிர்வாகிகளுடன் பொருளாளர் வெற்றிவேல்  தொடர் ஆலோசனை நடத்தி வந்தார்.  இந்த நிலையில், அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில், தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து, அவர்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

[youtube-feed feed=1]