சென்னை: தலைமைச் செயலக ஊழியர்கள் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட உள்ளதாக ஊழியர் சங்சம் அச்சம் தெரிவித்து உள்ளது.

கடந்த 2 வாரங்களில் மட்டும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தலைமைச் செயலக ஊழியர்கள் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமை படுத்தப்பட்டுள்ளனர் என  தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதில்,  தலைமைச்செயலக ஊழியர்களுக்கு தொற்று நோய் பரவலை தடுக்கும் வகையில் பாதுகாப்பை உறுதி செய்ய மத்தியஅரசின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும், அதன்படி 50 சதவிகித பணியாளர்களை மட்டுமே பணிக்கு வர அழைக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், நீரழிவு போன்ற நோய் உள்ளவர்களுக்கு அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், போர்க்கால அடிப்படையில்,  நோய்த்தொற்று சமூக பரவலாக மாறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பல பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளது.

தலைமைச் செயலகத்தில், மத்தியஅரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறி 100 சதவிகித பணியாளர்களும் வேலைக்கு வர தமிழகஅரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இடநெருக்கடி காரணமாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது, ஊழியர்களியே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.