சென்னை:
மிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் பதிவான வாகனங்களில் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் ஆர்டிஓ அலுவலகங்கள் செயல்படவில்லை. மேலும் வாகன ஷோரூம்கள் மூடப்பட்டன. இதனால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் விற்பனை கடும் சரிவை சந்தித்தது. அதன்பிறகான தளர்வுகளுக்கு பிறகு மே மாதத்தின் 2வது வாரத்திலிருந்து ஆர்டிஓ அலுவலகங்கள் மீண்டும் செயல்படத்துவங்கின. மேலும் அரசின் வழிகாட்டுதலின்படி புதிய, பழைய வாகன ஷோரூம்களும் திறக்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் வெளியில் வருவதற்கு தயக்கம் காட்டினர். பிறகு அவர்கள் மெல்ல, மெல்ல வெளியில் வரத்துவங்கினர்.

இதனால் வாகனங்களின் விற்பனையும் படிப்படியாக அதிகரிக்கத் துவங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு வாகனங்களை வாங்குவதற்காக வரும் மக்களை கவரும் விதமாகவும், வாகன விற்பனையை அதிகரிக்கும் வகையிலும், உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்தன. இதன் காரணமாக தமிழகத்தில் முடங்கிக்கிடந்த வாகன விற்பனை மீண்டும் அதிகரிக்க துவங்கியிருக்கிறது.

வாகன உற்பத்தியும் மீண்டும் துவங்கி நடந்து வருகிறது. இதுவரை நடப்பு ஆண்டில் 10 லட்சத்து 61 ஆயிரத்து 265 வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், சென்னை வடக்கு ஆர்டிஓ அலுவலகம் முதலிடம் பிடித்துள்ளது. இங்கு மட்டும் 6,49,050 வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.