சென்னை: தமிழக காங்கிரஸ் எம்பி விஷ்ணுபிரசாத், அவரது மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் சென்னைக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக வந்த, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு, கொரோனா தொற்று உறுதியானது. ஆகையால் அவரை சந்தித்த, திமுக, காங்கிரஸ் தலைவர்கள் கொரோனா தொற்று பரிசோதனை செய்துள்ளனர்.
இந் நிலையில் தமிழகம் வந்த தினேஷ் குண்டுராவை சந்தித்து பேசிய காங்கிரஸ் எம்பி விஷ்ணுபிரசாத்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அதில் அவர் கூறி உள்ளதாவது: நானும் என் மனைவியும் கோவிட் 19 பரிசோதனை செய்து கொண்டோம். எங்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, நாங்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எங்களுடன் தொடர்பு கொண்ட நண்பர்கள் உடல்நிலையை உன்னிப்பாக கவனித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.