Actors Dilip Kumar and Raj Kapoor. *** Local Caption *** Actors Dilip Kumar and Raj Kapoor. Photo by K G Samel

இந்தி நடிகர்கள் ராஜ் கபூர், திலீப் குமார் ஆகிய இருவருமே பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் பிறந்தவர்கள். சுதந்திரத்துக்குப் பின்னர் இருவருமே இந்தியாவிலேயே வசிக்கத் தொடங்கிவிட்டனர். இவர்களின் மூதாதையர் வீடுகள் பெஷாவர் நகரில் உள்ளன.
பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வாவில் உள்ள மாகாண அரசு, பாழடைந்த நிலையில் உள்ள ராஜ்குமார் மற்றும் திலீப் குமாரின் வீடுகளை வாங்க திட்டமிட்டுள்ளது.
கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தொல்பொருள் துறை, இரு நடிகர்களின் மூதாதையர் சொத்தான இந்த இரு கட்டடங்களையும் வாங்குவதற்கு போதுமான நிதியை ஒதுக்க முடிவு செய்துள்ளது. அவை பெஷாவர் நகரின் மையத்தில் அமைந்துள்ளன என்றும் தேசிய பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ராஜ் கபூரின் மூதாதையர் வீடு, கபூர் ஹவேலி என்று அழைக்கப்படுகிறது, இது fabled Qissa Khwani Bazar என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த வீடு 1918 மற்றும் 1922 க்கு இடையில் ராஜ் கபூரின் தாத்தா திவான் பஷேஸ்வர்நாத் கபூரால் (Dewan Basheswarnath Kapoor) கட்டப்பட்டது. அரசு ஏற்கனவே இந்த வீட்டை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.
https://twitter.com/TheDilipKumar/status/1311217944764973056
பழம்பெரும் நடிகர் திலீப் குமாரின் 100 ஆண்டுகளுக்கும் மேலான மூதாதையர் வீடும் இதே பகுதியில் அமைந்துள்ளது. ந்த வீடு, 2014 ஆம் ஆண்டில் அப்போதைய நவாஸ் ஷெரீப் அரசாங்கத்தால் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.