வாஷிங்டன்
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆலோசகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதையொட்டி அவர் தனது மனைவியுடன் சுய தனிமைப்படுத்திக் கொண்டார்.
டிரம்ப் மற்றும் அவர் மனைவிக்கு கொரோனா பரிசோதனை நேற்ற் நடந்தது.
இதில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி ஆனதாகச் செய்திகள் வெளியாகின.
நேற்று அவர் தாம் நலமுடன் உள்ளதாக டிவிட்டரில் பதிந்திருந்தார்.
இந்நிலையில் இன்று அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
Patrikai.com official YouTube Channel