டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,23,519 ஆக உயர்ந்து 97,529 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று இந்தியாவில் 80,500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 62.23,519 ஆகி உள்ளது. நேற்று 1,178 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 97,529 ஆகி உள்ளது. நேற்று 85,394 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 51,84,634 ஆகி உள்ளது. தற்போது 9,40,473 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 14,976 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 13,66,129 ஆகி உள்ளது நேற்று 430 பேர் உயிர் இழந்து மொத்தம் 31,181 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 19,212 பேர் குணமடைந்து மொத்தம் 10,69,159 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 6,190 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,87,911 ஆகி உள்ளது இதில் நேற்று 35 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,780 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 9,836 பேர் குணமடைந்து மொத்தம் 6,22,136 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 10,453 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,92,911 ஆகி உள்ளது இதில் நேற்று 136 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 8,777 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6,628 பேர் குணமடைந்து மொத்தம் 4,76,378 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 5,546 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,91,943 ஆகி உள்ளது இதில் நேற்று 70 பேர் உயிர் இழந்து மொத்தம் 9,453 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,501 பேர் குணமடைந்து மொத்தம் 5,36,209 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 3,981 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,94,856 ஆகி உள்ளது இதில் நேற்று 63 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,715 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,711 பேர் குணமடைந்து மொத்தம் 3,36,981 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.