புனே
உலகின் மிகப் பெரிய தடுப்பூசி தயார்க்கும் நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மேலும் 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி தயாரிக்க உள்ளது.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா அகில உலக அளவில் பல தடுப்பூசிகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. உலக சுகாதார மையத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் தடுப்பு மருந்துகள் உலகெங்கும் 170 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிறுவனம் தற்போது கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனையில் உள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவாலா ”அரசிடம் இருந்து ரூ.80,000 கோடி நிதி உதவி அளித்தால் இன்னும் ஓராண்டுகளுக்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அளிக்க முடியும். இதுவே தற்போது நமக்கு உள்ள சோதனை” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சீரம் இன்ஸ்டிடியூட் தங்களுக்கு பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் தன்னார்வு தொண்டு நிறுவனம் 15 லட்சம் டாலர் நிதி உதவி அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதைக் கொண்டு மேலும் சுமார் 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் காவி அல்லயன்ஸ் மற்றும் கேட்ஸ் தொண்டு நிறுவனம் இணைந்து 20 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்தை உருவாக்க ஒப்பந்தம் இட்டது.
அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்கு நிதி உதவி அளிக்க கேட்ஸ் தொண்டு நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. கொரோனா தடுப்பூசி மருந்து சோதனையில் பாதுகாப்பானது என உறுதி அளிக்கப்பட்ட பிறகு முழு அளவில் தடுப்பூசிகள் உற்பத்தி செயய உள்ளது அப்போது இதன் விலை 3 முதல் 250 டாலர் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.