டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 59,01,804 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில், 9,61,233 பேர் தொற்று பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 48,46,327 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 93,325 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.
நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 1093 பேர் உயிரிந்த நிலையில், இதுவரை தொற்று பாதிப்பு காரணமாக உயிரிந்தோர் மொத்த எண்ணிக்கை 93,410 ஆக அதிகரித்து உள்ளது.

Patrikai.com official YouTube Channel