Skip to content
  • Thu. Jul 16th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

வேளாண் மசோதாக்களைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் விவசாயிகளின் ‘பாரத் பந்த்’….

Sep 25, 2020

டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்களை கண்டித்து, நாடு முழுவதும் இன்று  விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் வடமாநிலங்களில்  இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களுக்கு, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், பாஜக தனது ஆதரவு கட்சிகளைக் கொண்டு மசோதாவை நிறைவேற்றி உள்ளது. இந்த புதிய மசோதாக்களுக்கு  விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மசோதாவை கண்டித்து வட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

மத்தியஅரசுக்கு கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி 3 நாட்கள் ரயில் போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இதனால் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்களும் நிறுத்தப்பட்டு,  போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து,  வேளாண் மசோதாக்களைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு (பாரத் பந்த்) பல்வேறு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.  பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ), அகில இந்திய விவசாயிகள் சங்கம் (ஏ.ஐ.எஃப்.யூ), அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு (ஏ.ஐ.கே.எஸ்.சி.சி.), அகில இந்திய கிசான் மகாசங்கம் (ஏ.ஐ.கே.எம்) ஆகிய கட்சிகள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி உள்பட  18 அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. விவசாயிகள் போராட்டம் காரணமாக  பல பகுதிகளில் பொதுபோக்குவரத்தும் பாதிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து அக்டோபர் 1ம் தேதி முதல் காலவரம்பற்ற ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

Post navigation

அக்டோபர் மாதாம் தொடங்கவுள்ள கோவேக்சின் 3ம் கட்ட மனித சோதனைகள்: பாரத் பயோடெக் நிறுவனம்
பீகார் சட்டமன்ற தேர்தல் தேதியுடன் தமிழக இடைத்தேர்தல் தேதியும் இன்று அறிவிக்கப்படுமா?

Related Post

இந்தியா

120 விஞ்ஞானிகள் ஓராண்டில் ராஜினாமா; பதவி விலக புதிய கட்டுப்பாடுகளை விதித்தது இஸ்ரோ

இந்தியா

“உண்ணாவிரதத்தை கைவிடச் சொல்லாதீர்கள்; போராட்டத்தில் பங்கேற்க வாருங்கள்” – சோனம் வாங்சுக் அழைப்பு

இந்தியா உலகம்

ரஷ்யாவுக்கு எதிராக கடும் தடைகள்: அமெரிக்க செனட்டில் புதிய மசோதா – இந்தியாவுக்கும் பாதிப்பு வருமா?

உலகம்

இந்தியா உலகம்

ரஷ்யாவுக்கு எதிராக கடும் தடைகள்: அமெரிக்க செனட்டில் புதிய மசோதா – இந்தியாவுக்கும் பாதிப்பு வருமா?

July 15, 2026 Sundar
உலகம்

“திறந்திடு சீசேம்” என ஹோர்முஸைத் திறந்த டிரம்ப்… கப்பல்கள் வெளியேற 20% கப்பம் வசூல்…

July 14, 2026 Sundar
உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது; ஈரான் கூற்றை மறுத்த டிரம்ப்

July 13, 2026 Sundar
உலகம்

பாங்காக் பப் தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு, 22 பேர் கவலைக்கிடம்

July 13, 2026 Sundar
உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer