நீட் தேர்வு அச்சத்தால் மிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.

இதுதொடர்பாக நடிகர் சூர்யா அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள் .

அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது. மாணவர்களின் நலன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாத நம் கல்விமுறையில், இனி பெற்றோர்களும், ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்கவேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்தார் .

சூர்யாவின் இந்த அறிக்கையைக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிலளித்திருக்கும் நடிகையும், பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம், “ரசிகர்கள் முதல்நாள் முதல் காட்சியை திரையரங்கில் கொண்டாட பேனர்கள் வைக்கிறார்கள். அந்த பேனர்கள் விழுந்து ரசிகர்கள் இறந்தால் சினிமாவையே தடைசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்போமா? எந்த ஒரு லாஜிக்கும் இல்லையே. தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்வதற்கு ஊக்கப்படுத்துங்கள். மருத்துவர்கள் ஒவ்வொருநாளும் நோயாளிகளைப் பார்ப்பதும் கூட தினமும் தேர்வு எழுதுவதைப் போலத்தான்” என்று கூறியிருக்கிறார்.