டெல்லி: பிரதமர் மோடி மயில்களுடன் பிசியாக இருந்து வருகிறார், நாட்டில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது, நம்மை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. முன்னதாக, ராகுல்காந்தி தனது தாயார் சோனியாவுடன் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சோனியாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
“பிரதமர் மோடி மயில்களுடன் பிசியாக இருப்ப தால் நம்மை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இந்த வாரத்தில் 50 லட்சத்தை எட்டிவிடும்.
திட்டமிடப்படாத பொதுமுடக்கம் ஒரு நபரின் ஈகோவின் விளைவாகும்”
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில், பிரதமர் மோடி மயிலுக்கு தான் உணவளிக்கும் வீடியோவை இணையத்தில் வெளியிட் டிருந்தார். இதை நக்கலடிக்கும் வகையில், ராகுல் வெளிநாட்டில் இருந்து டிவிட் பதிவிட்டுள்ளார்.