
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை (12ந்தேதி) வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,59,985 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 97,570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 1,201 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 77,472 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவ தால், நோய் பாதிப்பு உயர்ந்து வருவதாகவும், அதே வேளையில் தொற்று பாதிப்பில் இருந்து குணமடை வோர் விகிதமும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் இதுவரை 5,51,89,226 கோடி பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ள தாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,91,251 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்ப தாகவும் ஐஎம்சிஆர் தெரிவித்துள்ளது.