திருச்சி:  போலி கணக்கு காட்டி, ஏமாற்றி ரூ.50 கோடி ரூபாய் அளவிலான நில மோசடி தொடர்பாக தமிழகத்தில் உள்ள  அட்வென்ட்  கிறிஸ்தவ சபை பிஷப் டேவிட் கைது செய்யப்பட்டுஉள்ளார்.  அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கிறிஸ்தவ மிஷரிகளில் ஒன்று அட்வென்ட் சர்ச். இந்த அமைப்புக்கு  தமிழகம் முழுவதும்  ஏராளமான பள்ளிகள்  சர்ச்கள் உள்ளன. இதன்  சபையின் சென்னை மாவட்ட பிஷப்-ஆக இருப்பவர் டேவிட். இவருடைய கட்டுப்பாட்டில் 107 சர்ச்கள், 50 பள்ளிகள் இயங்கிவருகின்றன. இவை தவிர திருப்போரூர் பகுதியில் இயங்கிவரும் அட்வென்ட் பள்ளிகளுக்குத் தாளாளராகவும் இருந்து வருகிறார் டேவிட்.

குடும்பத்தினருடன் பிஷப் டேவிட்

சமீபத்தில், இந்த சபைக்கு சொந்தமான வேளச்சேரியில் உள்ள இடத்தை, குறைந்த விலைக்க, போலியாக வேறு ஒருவர் பெயருக்கு மாற்றி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான விசாரணையில்,  ரூ.50 கோடி மதிப்பிலான வேளச்சேரி இடத்தை, திருச்சியைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.3.75 கோடிக்கு  விற்பனை செய்வதாக போலியாக மற்றொருவருவடைய  கணக்கை கொடுத்து, தில்லுமுல்லு செய்துள்ளார். இதற்கிடையில்,  கடந்த மார்ச் மாதத்துடன் அவரிடன் பதவிக்காலம் முடிந்துவிட்டது.

இந்த நிலையில் பிஷப் டேவிட் முறைகேடு தொடர்பாக திருச்சியை சேர்ந்த நபர் புகார்  கொடுத்துள்ளார். அதை விசாரித்த காவல்துறையில் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில், போலி கணக்கு கொடுத்து, நிலத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதுபோல கூறி, அதை தனக்கு சாதமாக பயன்படுத்த முனைந்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து பிஷப் டேவிட்டை கைது செய்த காவல்துறையினர்,   திருச்சிக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக,  அட்வென்ட் சர்ச் பொருளாளர் பன்னீர்செல்வம், செயலாளர் ஸ்டீபன், புரோக்கர் நெல்லை சாமுவேல் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கர்த்தரின் பெயரைக் கூறிக்கொண்டு, முறைகேட்டில் ஈடுபட்ட இந்த சம்பவம் அட்வென்ட் கிறிஸ்தவ சபை மக்களி டையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.