திருவனந்தபுரம்: கொரோனா பாதிப்புக்குள்ளான இளம் பெண்ணை அழைத்துச்சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர், போகும் வழியில் அந்த பெண்ணை பாலியல்வன்கொடுமை செய்துள்ளார். புகாரின் பேரில், ஆம்புலன்ஸ் டிரைவர் தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
கேரளாவில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத் தைச் சேர்ந்த இரு பெண்கள் கொரோனா சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர் ஒரு பெண், மாவட்ட மருத்துவமனையில் இறக்கிவிடப்பட்ட நிலையில், 2வது பெண்ணை கோழேஞ்செரி (Kozhencherry) பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
அப்போது திடீரென ஆள்இல்லாத சாலையில் வண்டியை நிறுத்திய டிரைவர், ஆம்புலன்சின் பின்பகுதிக்கு சென்று, அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளான அந்த இளம்பெண், கொரோனா சிசிச்சை மையம் சென்றதும், அங்குள்ள மருத்துவர்களிம் புகார் கூறினார்.
இதையடுத்து, மருத்துவர்கள் காவல்துறையில் புகார் அளிக்க, விரைந்து வந்த போலீசார், இளம்பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநரையும் கைது செய்து, அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், கைதான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏற்கனவே, கொலை வழக்கில் ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டவர் எப்து தெரிய வந்துள்ளது. அவரை உடனே பணியில் இருந்து நீக்க கேரள சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா, கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொரு ஆம்புலன்சிலும் குறைந்தது இரண்டு ஊழியர்கள் இருக்க வேண்டும் என்றும், குடியிருப்பாளர்கள் பெண்கள் நோயாளிகள் மட்டுமே என்றால் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தல் களை வழங்கியுள்ளனர்