நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் ஒற்றையர் பிரிவுகளில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், பெலாரஸ் நாட்டின் விக்டோரியா அஸரன்கா மற்றும் ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடந்துவரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்பான நிலையை அடைந்துள்ளது.
செரினா வில்லியம்ஸ் தனது மூன்றாவது சுற்றில் சுலோன் ஸ்டீபன்ஸை வென்றார். மற்றொரு போட்டியில், பெலாரஸ் நாட்டின் விக்டோரியா, போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக்கை 3வது சுற்றில் வீழ்த்தினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவுகளில், ஆஸ்திரியாவின் டொமினிக் தியம், குரேஷியாவின் மரின் சிலிக் உடன் மோதி வெற்றிபெற்று, 4வது சுற்றுக்கு முன்னேறினார்.