கமல்ஹாசன் விஜய் டிவியில் நடத்தும் பிக்பாஸ் 4 ஷோவுக்கான புரமோஷனை கமல்ஹாசன் தொடங்கிவிட்டார். நலமா என்ற குசல விசாரிப்புடன் புரமோ வீடியோவில் தோன்றிய கமல் தற்போது ’தப்புன்னா தட்டிக் கேப்பேன் நல்லதுன்ன தட்டிக்கொடுப்பேன்’ என்று அடுத்த வீடியோவில் உரிமையுடன் தெரிவித்திருக் கிறார்.

பிக்பாஸ் தொடங்கும் நாள், அதில் பங்கேற்பவர்கள் யார் என்ற பட்டியல் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகாவிட்டலும் யூகங்கள் வெளியாகி வருகிறது. ‘இஸ்பேட் ராஜாவாவும் இதய ராணியும்’ பட நடிகை ஷில்பா மஞ்சுநாத், நடிகை ரம்யா பாண்டியன், அமுதவா ணன், சூர்யாதேவி போன்றவர்கள் பெயர்கள் அடிபடுகின்றன. தற்போது ‘பிகில்’ பட நடிகை பெயரும் அதில் சேர்ந்திருக்கிறது. விஜய் நடித்த பிகில் படத்தில் தென்றல் என்ற வேடத்தில் நடித்திருந்த அம்ரிதா ஐயர் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக கூறப்படுகிறது.
இதையறிந்த அம்ரிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக் பாஸ் பட்டிலில் என்னை சேர்த்தது யார் என்று கேட்டு ஒரு குறும்பு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
[youtube-feed feed=1]#AmrithaAiyer : "Why are random people adding my name in the big boss list 🧐" pic.twitter.com/DW07sKadFB
— Amritha Aiyer – Thendral (@Amritha_Aiyer) September 5, 2020