மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 10 மணி அளவில் வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 86432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப் பட்டோர் மொத்த எண்ணிக்கை 40,23,179 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் தொற்று உறுதியாகி இருப்பது மருத்துவ நிபுணர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்களிடையே அச்சத்தை உருவாக்கி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு காரணமாக 1089 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 69561 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 1.73 சதவீதமாக உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 4,77,38,491 சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது, நேற்று ஒரே நாளில் மட்டும் 10,59,346 மாதிரிகள் சோதனை செய்யப்பட் டிருப்பதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.