சிபிஐ அதிகாரிகள் நடிகை ரியாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரியாவுடன் அவரது சகோதரர் ஷோவிக், சுஷாந்த்தின் நண்பர் சித்தார்த் பிதானி, மற்றும் சுஷாந்த் இல்லத்தின் மேலாளர் சாமுவேல் மிராண்டா, உதவியாளர் தீபேஷ் ஆகியோரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

இந்த விசாரணையின் அடிப்படையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு போதைப் பொருட்கள் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் மும்பையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான போதைப் பொருட்கள் மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அவர்களின் மூலம் ஜைத் விளாத்ரா மற்றும் அப்துல் பாசித் பரிஹார் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் பரிஹார் என்பவரிடம் நடத்திய விசாரணையில் அவருடன் சுஷாந்த்தின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டாவும், ரியாவின் நண்பர் ஒருவரும் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

[youtube-feed feed=1]