
இன்று (செப்டம்பர் 2) தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.
இதனிடையே பவன் கல்யாண் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று (செப்டம்பர் 1) அவருடைய ரசிகர்கள் அவருக்காக 25 அடி பேனர் வைக்க முற்படும்போது அருகில் சென்ற மின்சார ஒயர் மீது பேனர் படவே, அனைவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதில் சோமசேகர், ராஜேந்திரா மற்றும் அருணாச்சலம் ஆகிய மூன்று ரசிகர்கள் பலியானார்கள். சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel