ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு இரண்டரை கோடியை தாண்டி உள்ளது.  இன்று (செப்டம்பர் 2ந்தேதி )  காலை 7 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளோர் எண்ணிக்கை  2,58,91,002 ஆக உயர்ந்துள்ளது.

தொற்றுபாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 1,81,85,770 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை  8,60,278 ஆக அதிகரித்து உள்ளது.

கொரோனா பாதிப்பில் உலக அளவில் முதலிடத்தில் அமெரிக்கா தொடர்ந்து வருகிறது.   அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,257,571ஆகவும்,  இதுவரை  188,900 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இதுவரை 3,496,913பேர் குணமடைந்து உள்ளனர்.

மொத்த எண்ணிக்கை  3,952,790  ஆக உள்ளது.   இதுவரை தொற்று பாதிப்பு காரணமாக  122,681  பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை  3,159,096 பேர் குணமடைந்து உள்ளனர்.3வது இடத்தில் இந்தியா தொடர்ந்து வருகிறது. ஆனால், ஒருநாள் பாதிப்பில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது.

இந்தியாவில், இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  3,766,108 ஆக  உள்ளது.  இதுவரை    66,460  பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 2,899,521  பேர் குணமடைந்து உள்ளனர்.

இதுவரை அமெரிக்காவில் 1.88 லட்சம், பிரேசிலில் 1.22 லட்சம், ரஷ்யாவில் 17,299 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.