நாகை: கொரோனா அச்சம் காரணமாக, தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தன்னை வீட்டிலேயெ தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்து உள்ளார்.

தமிழக அரசின் கைத்தறி துறை அமைச்சராக இருந்து வரும், ஓ.எஸ் மணியனின் மனைவி கலைச்செல்வி உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆகஸ்டு மாதம் 28ந்தேதி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு, சொந்த ஊரான, நாகை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில், அவரது உறவினர்கள், கட்சியினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், மனைவின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற உறவினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதனால் அதிர்ச்சி அமைந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ஒருவாரத்துக்கு, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார்.