இந்தியாவின் முதல் பெண் இருதயநோய் நிபுணர் பத்மாவதி (வயது 103) கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
1917ம்ஆண்டு ஒருங்கிணைந்த இந்தியாவில் உள்ள பர்மாவில் பிறந்த பத்மாவதி, இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தில் 1942ம் ஆண்டு இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்தார்.
மருத்துவம் படித்து பட்டம் பெற்ற பத்மாவதி இந்தியாவின் முதல் பெண் இருதய நோய் நிபுணர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராவார்.
காட் மதர் ஆப் கார்டியாலஜி என புகழப்பட்ட பத்மாவதி, கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனை யில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக, தேசிய இதயநோய் மையம் தெரிவித்துள்ளது.
டாக்டர் பத்மாவதி, பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றி இருப்பதுடன், 1967-ம் ஆண்டு டெல்லியில் உள்ள மெளலானா மருத்துவக் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்த, முதல் இதய நோய் சிகிச்சைப் பிரிவையும் இந்தியாவில் தொடங்கினார்.
இவரது மருத்துவ சேவையை பாராட்டி, இந்திய அரசு, கடந்த 1967ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் 1992ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வழங்கி கவுரவித்தது.
1962ம் ஆண்டு அகில இந்திய இதய அறக்கட்டளை நிறுவினார். பின்னர், 1981ம் ஆண்டு தேசிய இதய சிகிச்சை நிறுவனத்தை தொடங்கினார்.