சென்னை
பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான எஸ் பி பாலசுப்ரமணியம் மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று காரணமாக இந்த மாதம் ஐந்தாம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுத் திணறல் அதிகமாக இருந்ததால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆயினும் அவர் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்தது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அவருடைய ரசிகர்களும் பிரபலங்களும் அவர் குணமடைய வாழ்த்து தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் அவர் குணமடைய கூட்டுப்பிரார்த்தனைகள் நடந்தன. இந்நிலையின் இன்று எஸ் பி பாலசுப்ரம்ணியம் மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]