தருமபுரி: பொறியியல் படிப்பில் சேர இதுவரை 1,39 ,339 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் கே.பி. அன்பழகன், அங்கு ஆட்சியர் அலுவலகத்தில் துறை தொடர்பாக ஆய்வு செய்தார். பின்னர் அங்கு நடைபெற்ற ஒகேனக்கல் உபரி நீர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் வழியாக விண்ணப் பம் பெறப்பட்டு வருகிறது. இந்தாண்டு பொறியியல் படிப்புக்கு கடந்த ஆண்டை விட அதிக அளவி லான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதுவரை (ஆகஸ்டு 7ந்தேதிவரை) 1லட்சத்து 39 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், கந்த ஆண்டு 1லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.
இதுவரை பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளவர்களில், 1,10,577 பேர் விண்ணப்பத்திற்கான கட்டணம் செலுத்திவிட்டனர். இந்தாண்டு முதல் பொறியியல் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பிடித்த கல்லூரியைத் தேர்வு செய்து கொள்ளலாம், மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் சேவை மையங்கள் மூலம் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
அதுபோல, கலை அறிவியல் கல்லூரிகளில் இதுவரை 3,16, 795 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் 2,17 ,494 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.