Skip to content
  • Sat. Sep 19th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது… ராதாகிருஷ்ணன்

Aug 4, 2020

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  குறைந்து வருகிறது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆய்வு நடத்தினார். செங்கல்பட்டு மருத்துவமனைக்கு சென்றவர், அங்கு கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், வார்டுகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவ நிபுணர்களுடன் விவரம் கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர்,  தமிழகத்தில் பல இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிவதை சரியாக பின்பற்றுவதில்லை. மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால்தான் கொரோனாவின் அடுத்த அலையை கட்டுப்படுத்த முடியும் என்றார்.
தற்போதைய நிலையில்,  தமிழகத்தில்  நாள்தோறும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு   ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படுகிறது.  இருப்பினும் அரசு விதிமுறைகளை மக்கள் கடைப்பிடித்தாலே கொரோனாவில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளமுடியும்.
தமிழ்நாட்டில் தொற்று பரவல் எண்ணிக்கை  தற்போது குறைந்து வருகிறது. இதனால்  மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
கொரோனா குறித்து பீதி அடையாமல்,  அறிகுறி தெரிந்தவுடன் அதற்கான சோதனைகளை நடத்தி உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் அதிலிருந்து மீளமுடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Post navigation

04/08/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்.
இன்று 5,063 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2,68,285 ஆக உயர்வு…

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer