தெருக்களுக்கு,அதிக ‘மார்க்’ வாங்கும் மாணவர்கள் பெயர்..
சந்துகளுக்கும், சாலைகளுக்கும் அரசியல் தலைவர்கள் பெயர் சூட்டி அழகு பார்ப்பது , வழக்கம்.
ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் நாகார் மாவட்ட நிர்வாகம் ,பரீட்சையில் அதிக மதிப்பெண் பெரும் மாணவ.- மாணவிகள் பெயரை, சாலைகளுக்குச் சூட்டி, ‘’புதியபாதை’’ போட்டுள்ளது.
நாகார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சாலைகள் மற்றும் தெருக்களை மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்காமல். சில ‘’ஆதிக்க சக்திகள்’’ தங்கள் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொண்டுள்ளனர்.
இந்த ஆக்கிரமிப்பு சாலைகளை, மாவட்ட நிர்வாகம், மீட்டெடுத்து வருகின்றன.
அந்த சாலைகளுக்குத் தலைவர்கள், மற்றும் அரசியல் வாதிகள் பெயரை வைக்காமல், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளோர் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
அந்த மாவட்டத்தில் உள்ள குச்சேரா பகுதியைச் சேர்ந்த திவ்யா சர்மா என்ற மாணவி அண்மையில் நடந்த பத்தாம் வகுப்புத் தேர்வில், 97 % மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்திருந்தார்.
அந்த ஏரியாவில் உள்ள ஒரு சாலைக்கு ,அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
குஷ்பு ரதோர், காசல் படேசர், பூஜா சவுத்ரி, கோமல் ஆகிய பெயர்களையும் அங்குள்ள சாலைகளில் நீங்கள் , பார்க்கலாம். அவர்கள் எல்லாம், பரீட்சையில் அதிக ‘மார்க்’ பெற்று அசத்தியவர்கள் ஆவர்.
-பா.பாரதி.