Skip to content
  • Sat. Sep 19th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

அமித்ஷாவுக்கு கொரோனா எதிரொலி… தனிமைப்படுத்திக் கொண்ட ரவிசங்கர் பிரசாத்

Aug 3, 2020

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதியானதன் எதிரொலியாக,  அவருடன் தொடர்பில் இருந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. தலைநகர் டெல்லியிலும் தொற்று பரவல் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

இதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர், தனது டிவிட்டர் பதிவில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  அமித்ஷாவுடன் தொடர்பில் இருந்து,  மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை உள்துறை மந்திரி அமித்ஷாவை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் சந்தித்த நிலையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ரவிசங்கர் பிரசாத்தும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post navigation

உ.பி. மாநிலத்தில் 2300 கொரோனா நோயாளிகள் பெயர், முகவரிகளை மாற்றி கொடுத்த அவலம்…
மயிலாடுதுறை திமுக எம்பி சே.ராமலிங்கத்துக்கு கொரோனா உறுதி…

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer