சென்னை:
எல்ஐசி ஆயுள் காப்பீடு பாலிசிகள் யூனியன் வங்கி கிளைகளில் விற்பனை செய்யப்படுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனால் யூனியன் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான சிறப்பான பாதுகாப்பான முதலீடுகளுக்கு எல்ஐசி பாலிசிகளை எளிதில் வாங்கலாம் என்று யூனியன் வங்கியின் பீல்டு பொதுமேலாளர் எம்.எச். பத்மநாபன் தெரிவித்தார்.
யூனியன் வங்கி சமீபத்தில் ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கியை தன்னுடன் இணைத்து பெரிய வங்கியாக உருமாறி உள்ளது. இந்த வங்கிக்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 1021 கிளைகள் உள்ளது.
இந்த நிலையில் நாட்டு மக்களிடையே, பல்லாண்டு காலமாக நம்பிக்கைக்கு உரிய வகையில் செயல்பட்டு வரும், ஆயுள் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) நிறுவனத்தின் பாலிசிகளை யூனியன் வங்கி கிளைகளில் விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
எல்ஐசி நிறுவனம் நாடு முழுவதும் பல கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. வாடிக்கை யாளர்களின் தேவைக்கேற்ப சிறு மற்றும் நீண்ட கால ஆயுள் காப்பீடுகளை வழங்கி வருகிறது.
இந்த நிலையில் எல்ஐசி பாலிசிகளை யூனியன் வங்கியில் விற்பனை செய்ய இரு நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எல்ஐசி தென்மண்டல பிராந்திய மேலாளர் கே .கதிரேசன், எல்ஐசியின் ஆயுள் காப்பீடு திட்டங்கள் யூனியன் வங்கி கிளைகளில் அதன் வாடிக்கையாளர் களுக்கு பல்வேறு ரக காப்பீடு திட்டங்களை ஒரே இடத்தில் விற்பனை செய்ய முடியும், எல்ஐசி பாலிசிகளுக்கு யூனியன் வங்கி வாடிக்கையாளரிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.